வனவியல்
மரப்பயிர்களில் விதையில்லாப் பெருக்கம்
டால்பெர்ஜியா சிசூ

அ. முதிர்ந்த தண்டுதுண்டுகள்
15 – 20  செ.மீ  நீளமான தண்டுதுண்டுகளை பயன்படுத்த வேண்டும். ஜுன் – ஆகஸ்ட் மாதங்களில் சேகரிக்கப்படும் தண்டுதுண்டுகள் நன்கு பலனளிக்கும். இந்த தண்டுதுண்டுகள் 100  பி.பி.எம். ஐ.பி.ஏ.  கலவை நீரில் 24 மணி நேரம் முக்கியப்பின் நாற்றுப்பண்ணையில் அல்லது மணல்: மண் (1 : 1) அளவில் நிரப்பபட்ட பாலித்தீன் பைகளில் நாட்ட வேண்டும். 4 – 6 வாரங்களில் வேர்கள் விட ஆரம்பிக்கும். வெயில் காலங்களில் முறையாக நீர் பாய்ச்ச வேண்டும்.
ஆ. இளசான  தண்டுதுண்டுகள்
ஜுன் – ஆகஸ்ட் மாதங்களில் முளையிலிருக்கும் நன்கு வளரக்கூடிய 4 – 8  செ.மீ நீளமான தண்டுதுண்டுகளை வெட்ட வேண்டும். மேலிருக்கும் இரண்டு இலைகளை மட்டும் விடுத்து மீதி இலைகளை வெட்டி விட வேண்டும். இதை மண்புழு உர ஊடகத்தில் நட வேண்டும். மூன்று வாரங்களில் வேர்விடும் தண்டுத்துண்டுகளை நடுவயலில் நடுவதற்கு முன் கடினப்படுத்த வேண்டும்.                     
இ. உத்துயிர்பெறுதல்        
இளம் தண்டுத்துண்டுகள், இளந்தளிர்களிலிருந்தும் வேர்கன்று ளிலிருந்தும் நன்கு கிடைக்கும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016